வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 1 Trådens avsändare: Narasimhan Raghavan
|
சமீபத்தில் 1975-லிருந்து நான் மொழி பெயர்ப்பு வேலைகளைச் செய்து வருகிறேன். விடாமல் நாம் வேலைகள் பெற நம்மிடம் வாடிக்கையாளரை எப்படி அணுகுவது என்பது பற்றியத் தெளிவான கருத்துகள் இருக்க வேண்ட�... See more சமீபத்தில் 1975-லிருந்து நான் மொழி பெயர்ப்பு வேலைகளைச் செய்து வருகிறேன். விடாமல் நாம் வேலைகள் பெற நம்மிடம் வாடிக்கையாளரை எப்படி அணுகுவது என்பது பற்றியத் தெளிவான கருத்துகள் இருக்க வேண்டும். அவை இருந்தாலே பாதி காரியம் முடிந்த மாதிரித்தான்.
1. எல்லாவற்றையும் விட முக்கியமானது புது வாடிக்கையாளரைப் பிடிப்பது. எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்? யாருக்கு எழுத வேண்டும் என்றெல்லாம் பார்க்கலாம். இதற்கு மட்டும் பின்னால் ஒரு தனிப் பதிவு தேவைப் படும்.
2. உங்களை நீங்கள் அறிய வேண்டும். அதாவது உங்களால் எது முடியும் எது முடியாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தேவையில்லாது வாக்குறுதிகள் அளித்து விட்டு அவற்றை நிறைவேற்றாது போனால் உங்கள் நம்பகத்தன்மை அடிபட்டு விடும். உதாரணத்துக்கு வேலை எப்போது முடித்துத் தரவேண்டும் அன்று வாடிக்கையாளர் கூறும்போது அது உங்களுக்குத் தோதுப்படுமா என்று பார்த்தே ஒத்துக் கொள்ள வேண்டும். பத்துக்கு ஒன்பதுத தருணங்களில் அவசரம் என்று வாடிக்கையாளர் கூறுவது உதாராகத்தான் இருக்கும். அவசரமான வேலை என்றால் ஒன்றரை மடங்கு விலை என்றுக கூறிப் பாருங்கள் அவசரம் என்பது அவசரமாகவே மறைந்து விடும். இது பற்றிப் பின்னால் மேலும் விவரமாகக் கூறுகிறேன்.
3. உங்கள் விலை என்ன என்பதில் தெளிவாக இருங்கள். மொழி பெயர்ப்பாளர்கள் பலர் இதில்தான் கோட்டை விடுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை வேலை சுலபமாகவே இருக்கலாம். அவர்களுக்கு மிகவும் பிடித்ததாகவே கூட இருக்கலாம். அதை எல்லாம் வாடிக்கையாளரிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. பிறகு அவர் உங்களுக்கு ஏதோ சலுகை காட்டுவது போலத் தோற்றம் வந்து விடும். இது பற்றியும் அடுத்த பதிவுகளில் மேலும் கூறுவேன்.
4. வாடிக்கையாளர்களின் வாக்குறுதிகளை அப்படியே நம்பி விடாதீர்கள். தங்களிடம் ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருப்பதாகவும் நிறைய வேலை கொடுக்க முடியும் என்றும் ஆசை காட்டுவார்கள். இதுவும் மேலே கூறியதை போன்று அனேகமாக ஒரு உதாராகத்தான் இருக்கும். அவர்களிடம் ஒரே ஒரு வேலை இருந்தாலும் அவ்வாறுதான் கூறுவார்கள். அவர்கள் அக்கறை முடிந்த அளவுக்கு விலையைக் குறைப்பதே ஆகும். இதை நான் என்னளவில் எவ்வாறு கையாண்டேன் என்பதையும் பின்னொருப் பதிவில் கூறுவேன்.
5. தேவையில்லாத விவரங்கள் கொடுக்காதீர்கள். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு முழு நேர வேலை வைத்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு என்பது பகுதிநேரவேலை. அவ்வேலைக்கான வாடிக்கையாளரிடம் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை ஒரு போதும் கூறக்கூடாது. அவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை அடிக்கடி கேட்பார்கள். மரியாதையுடன் அதே நேரத்தில் உறுதியுடன் தகவல் தர மறுத்து விடவும். இது பற்றி நான் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பிறகு கூறுகிறேன்.
6. எப்போதும் உங்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக உங்கள் தகவல் வழிகளைத் திறந்து வைக்கவும். தொலைபேசி வைத்திருப்பது மிக முக்கியம். தொலைபேசி அழைப்புகளை நீங்களே கையாளுவது முக்கியம். குழந்தைகளைத் தொலைபேசியை எடுக்க விடாதீர்கள். அது முடியாது என்றால் உங்களுக்கென்றுத் தனியாக செல்பேசி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களிடம் மட்டும் இருக்க வேண்டும். செல்பேசி "யூனிவர்செல்"பேசியாக மாறக் கூடாது. இதில் பல சாத்திய கூறுகள் உள்ளன. அவை பற்றிப் பிறகு.
7. உங்கள் அப்போதைய நிலை எதுவாக இருப்பினும் அதன் சாதகமான அம்சங்களையே வலியுறுத்தவும். 2002 வரை என்னிடம் கணினி இல்லை. இப்போது உண்டு. இரண்டு நிலைகளையும் நான் எனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டேன். அது பற்றிப் பிறகு.
8. வேலை செய்தால் மட்டும் போதாது. வரவேண்டிய தொகைகளையும் வசூலிக்கத் தெரிய வேண்டும். இது சம்பந்தமாக பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் குறித்துப் பிறகு விரிவாகப் பேசுவேன்.
மேலே கூறியவற்றையும், மேலும் கூறப் போவதைப் பற்றியும் பேச என்னுடைய யோக்கியதாம்சங்கள் என்ன? சமீபத்தில் 1975-லிருந்து நானே உணர்ந்துக் கடைபிடித்ததைப் பற்றித்தான் கூறப்போகிறேன். நான் சென்னையில் வெற்றிகரமாகச் செயல் புரியும் ஒரு மொழி பெயர்ப்பாளன் என்றுக் கூறுவதைத் தடுக்க என்னிடம் பொய்யடக்கம் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: இது பத்து பகுதிகளாக எனது தமிழ் வலைப்பூவில் வந்தது. இப்பகுதியின் சுட்டி http://dondu.blogspot.com/2005/04/1.html
இதைப் பார்க்கும்போது அதற்கான மற்றப் பதிவர்களின் பின்னூட்டங்களையும் பார்த்து விடவும். ▲ Collapse | | |
அருமையான கட்டுரை | May 3, 2007 |
புதிதாக புரோசுக்கு வருகின்றவர்களுக்கு, தங்களுடைய கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்தக் கட்டுரையை நீங்கள் Articles Knowledgebase பகுதியில் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் ஒவ்வொரு கட்டுரைக்கும் உங்களுக்கு 2000 புள்ளிகள் வேறு கிடைக்குமே.
ஏற்கெனவே புள்ளிகள் நிறைய உள்ளன என்கிறீர்களா? | | |
நன்றி பொன்னன் அவர்களே | May 3, 2007 |
நீங்கள் சொன்னபடி கட்டுரையை பதிப்பதற்காக அனுப்பி விட்டேன். பாவம் புரோஸ்காரர்கள். தமிழில் அதை படிக்க ஆள் தேடுவார்கள்.
பார்ப்போம். 2000 புள்ளிகள் கிடைத்தால் வேண்டாம் என்று யார் சொல்வார்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன் | | |
புரோஸ்காரர்களுக்கு அந்தப் பிரச்னையே இல்லை. நாங்கள் எல்லாம் எதற்கு இருக்கிறோம்? சொன்னால் படிக்க மாட்டோமா? | |
|
|
அன்புள்ள திரு. ராகவன் அவர்களுக்கு | Jan 29, 2009 |
மொழி பெயர்ப்பில் உங்கள் அனுபவம் குறித்தப் பதிவுகள் எங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு மிகவும் பயன்தரும் குறிப்புகள். தொடர்ந்து எழுதுங்கள் நன்றி | | |
zac zac Indien Engelska till Tamil + ...
ஐயா, தங்கள் புள்ளிகளே முக்கியத்துவத்தை கூறும் வகையில் அமைந்துள்ளன. நான் மொழிபெயர்ப்பாளராக கடந்த 2 வருடங்களாகத்தான் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் கூறிய அனைத்து பிரச்சினைகளையும் நான் எதிர்கொண்டுள்ளேன். நன்றி, தங்கள் அனுபவம் எங்களைப் போன்றோருக்கு மிகவும் உதவிகரமானதாக அமையும். | | |
Det finns ingen moderator för det här paret.
To report site rules violations or get help, please contact
site staff »
வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 1
No recent translation news about Indonesien. |
LinguaCore |
---|
AI Translation at Your Fingertips
The underlying LLM technology of LinguaCore offers AI translations of unprecedented quality. Quick and simple. Add a human linguistic review at the end for expert-level quality at a fraction of the cost and time.
More info » |
|
Wordfast Pro |
---|
Translation Memory Software for Any Platform
Exclusive discount for ProZ.com users!
Save over 13% when purchasing Wordfast Pro through ProZ.com. Wordfast is the world's #1 provider of platform-independent Translation Memory software. Consistently ranked the most user-friendly and highest value
Buy now! » |
|