This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
ஆங்கில மொழியில் நுண்மான் நுழைபுலம் இருப்பவர்களே தமிழ் மொழிபெயர்ப்புப் பணிக்கு வர வேண்டும் என்பதும் அதே அளவு தமிழில் ஆழ்ந்த புலமையும் ஆர்வமும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருக்க வ... See more
ஆங்கில மொழியில் நுண்மான் நுழைபுலம் இருப்பவர்களே தமிழ் மொழிபெயர்ப்புப் பணிக்கு வர வேண்டும் என்பதும் அதே அளவு தமிழில் ஆழ்ந்த புலமையும் ஆர்வமும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருக்க வேண்டும் என்பதும் எனது கருத்து.
இதை விளக்க ஒரே ஒரு ஆங்கில வார்த்தை போதும்! அது தான் ONLY என்னும் ஆங்கில வார்த்தை!
கீழே உள்ள ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம்;
I HIT HIM IN THE EYE YESTERDAY.
இந்த வாக்கியத்தில் ONLY செய்யும் மாயாஜாலங்களைப் பார்ப்போமா?
ONLY I HIT HIM IN THE EYE YESTERDAY.
I ONLY HIT HIM IN THE EYE YESTERDAY.
I HIT ONLY HIM IN THE EYE YESTERDAY.
I HIT HIM ONLY IN THE EYE YESTERDAY.
I HIT HIM IN THE ONLY EYE YESTERDAY.
I HIT HIM IN THE EYE ONLY YESTERDAY.
I HIT HIM IN THE EYE YESTERDAY ONLY.
மேலே உள்ள வாக்கியங்களின் மொழிபெயர்ப்பு வருமாறு:-
நான் மட்டுமே அவனது கண்ணில் நேற்று தாக்கினேன்.
நான் தான் அவனது கண்ணில் நேற்று தாக்கினேன்.
நான் அவனை மட்டுமே கண்ணில் நேற்று தாக்கினேன்.
நான் அவனது கண்ணில் மட்டுமே நேற்று தாக்கினேன்.
நான் அவனது ஒரே கண்ணை மட்டுமே நேற்று தாக்கினேன்.
நான் அவனது கண்ணில் மட்டுமே நேற்று தாக்கினேன்.
நான் நேற்று மட்டுமே அவனது கண்ணில் தாக்கினேன்.
இதில் நான்காம் வாக்கியமும் ஆறாம் வாக்கியமும் பொருள் விளங்கும் படி இன்னும் சற்று விரிவு படுத்தப்பட வேண்டியதாய் இருக்கிறது.
ஏழு வாக்கியங்கள்! ஆனால் ஒரே ஒரு வார்த்தை இடம் மாறிப் போனால் வெவ்வேறு பொருளைத் தருகிறது.
இதை அமைத்தவர் கொலம்பியாவைச் சேர்ந்த பேராசிரியர் எர்னஸ்ட் பிரென்னக் என்பவர் ஆவார்.
இதே ONLY கொண்ட இன்னும் ஒரு மாயாஜால வாக்கியம் இதோ:-
ONLY MY SISTER ASKED ME TO LEND HER SOME MONEY.
ONLY என்ற வார்த்தையை இடம் மாற்றிப் போட்டுப் பாருங்கள். அர்த்தத்தில் விளையும் மாயாஜாலம் கண்டு மகிழுங்கள்.
ஆகவே இதை மொழிபெயர்ப்பு செய்பவர் எவ்வளவு கருத்தூன்றி கவனமாகச் செய்ய வேண்டும்!
மொழிபெயர்ப்பு விளையாட்டு அல்ல; கருத்தைப் பரிமாறும் உன்னத கலை அது.
இதைப் படித்த உங்களின் கருத்துக்களை அறிய பெரிதும் விரும்புகிறேன்.
மேலே உள்ள ‘ONLY ஜாலம்’, நான் எழுதிய 'ஆங்கிலம் அறிவோமா' என்ற புத்தகத்தில் ‘இடம் மாறிப் போனால் பொருள் மாறிப் போகும்’ என்ற அத்தியாயத்திலிருந்து தரப்படுகிறது.
மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
ச.நாகராஜன் ▲ Collapse
Subject:
Comment:
The contents of this post will automatically be included in the ticket generated. Please add any additional comments or explanation (optional)
Create customer quotes and invoices from within Trados Studio
Trados Business Manager Lite helps to simplify and speed up some of the daily tasks, such as invoicing and reporting, associated with running your freelance translation business.
Translate faster & easier, using a sophisticated CAT tool built by a translator / developer.
Accept jobs from clients who use Trados, MemoQ, Wordfast & major CAT tools.
Download and start using CafeTran Espresso -- for free